மோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு

0

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 சதவீதம் உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கடன் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. அதன்பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று, பிரதமர் மோடி வந்தபின் நாட்டின் கடன் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி ரூ.82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுக்கடன் ரூ.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 51.7 சதவீதம் உயர்ந்து, ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவீதம் அதிகரித்து ரூ.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சந்தையில் மத்திய அரசு கடன் பெற்ற அளவும் 47.5 சதவீதம் அதிகரித்து, ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தங்கவிற்பனை பத்திரத்தின் மூலம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏதும் இல்லை. தற்போது ரூ.9 ஆயிரத்து 89 கோடியாகும்.

Comments are closed.