ஆதாரம் கேட்டது ஆதார் கார்டுக்கு; குடியுரிமைக்கு அல்ல -கருத்தை மாற்றிய UIDAI

0

ஆதார் கார்டு பெற போலியான ஆவணங்களை சமர்பித்ததாக கூறி 127 பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் UIDAI அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாவது, ‘நீங்கள் இந்தியர் இல்லை என புகார் வந்துள்ளது. ஆகவே எங்களது அலுவலகத்தில் நீங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்படாமல் இருந்தால், 2016 ஆதார் சட்ட விதிகளின்படி ஆதார் எண்ணை செயலிழக்க செய்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நீங்கள் இந்திய குடிமகன் இல்லை?’- ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய UIDAI

UIDAI-வின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில், தற்போது UIDAI அமைப்பு, தாங்கள் யாரிடமும் குடியுரிமை ஆவணங்களை கேட்கவில்லை என மாற்றி கூறியுள்ளது.

‘ஆதார் எண் பெறுவதற்கு அளிக்க வேண்டிய சான்றுகளில் முறைகேடு உள்ளதாக கருதப்படுபவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அவர்களிடம் ஆதார் எண் பெற தேவையான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. அப்படி தேவையான சான்றுகள் இல்லாதபோது, ஆதார் ரத்து செய்யப்படும். இது வழக்கமான நடைமுறைதான்’ என UIDAI கூறியுள்ளது.

நாடு முழுவதும் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், 127 இஸ்லாமியர்களுக்கு, தங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு UIDAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது எதிர்ப்பலைகள் அதிகமாகிவிட்டதால் UIDAI அமைப்பு, குடியுரிமைக்கான ஆதாரம் கேட்கவில்லை என கருத்தை மற்றித்தெரிவித்துள்ளது.

Comments are closed.