தமிழகத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்துவா சக்திகளிடமிருந்து எச்சரிக்கை தேவை- பத்திரிகையாளர் என்.ராம் பேச்சு

0

பாஜக அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்துத்துவாவை தமிழகத்திற்குள் நுழைக்க பல தந்திரங்களைக் கையாண்டு வருவதாகவும், அவர்களின் முயற்சியை தோல்வியடைய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உதகையில் நடைபெற்ற படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் உதகையில் படுகர் சமுதாய மக்களின் காலண்டர் வெளியீட்டு விழாவில், இந்து நாளீதழ் குழும தலைவரும், மூத்த பத்திரியகியாளருமான என்.ராம் கலந்துகொண்டு படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய காலண்டரை வெளியிட்டார்.

அப்போது பேசிய என்.ராம், “மத்திய பாஜக அரசு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இந்துத்துவாவை தமிழகத்திற்குள் நுழைக்க பல தந்திரங்களைக் மேற்கொண்டது. ஆனால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை. அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை சீர்குலைக்க இந்துத்துவா தீயசக்திகள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்வதால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.