என் மகளின் கொலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- நிர்பயாவின் தாய்

0

நிர்பயா குற்றவாளிகளை ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு நிலுவையில் உள்ளாதால், குறித்த தேதியில் நான்கு பேரையும் தூக்கிலிடுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

நிர்பயாவை கற்பழித்து கொலை செய்யப்பட்ட முதல் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப்போராடி வருகிறார் அவரது தாய்.

அவர் கூறுகையில், இதுவரை நான் எப்போதுமே அரசியல் பற்றி பேசியதில்லை. ஆனால், தற்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனது மகள் மரணம் அடைந்த போது 2012ஆம் ஆண்டில் யாரெல்லாம் சாலையில் இறங்கிப் போராடினார்களோ, அவர்களே தற்போது எனது மகளின் இறப்பின் மூலம் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிர்பயாவின் கொலையை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Comments are closed.