திருவள்ளுவர் சிலைக்கு மாட்டு சாணம்: காட்டுமிராண்டிகளை தடுக்குமா தமிழக அரசு…?

0

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாட்டு சாணத்தைப் பூசி இழிவுபடுத்திய மர்ம நபர்கள்.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாட்டு சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் மெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், திருவள்ளுவர் சிலை மீது சாணம் பூசிய பாஜகவினரை தேடி வருகின்றனர்.

இதனையடுத்து காவல்துறையினரே திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.

திருவள்ளுவருக்கு காவி உடை, நெற்றியில் பொட்டு என சாமியார் போல மாற்றம் செய்த புகைப்படத்தை,  தமிழ்நாடு பாஜக அதிகார்வபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு சாணம் அடித்ததும் பாஜகவினர்தான் எனும் சந்தேகம் இயல்பாக எழுந்துள்ளது.

Leave A Reply