“இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஸ்டானுக்கு தெளிவு இல்லை”- பழ. கருப்பையா!

0

திமுகவிலிருந்து விலகிய பழ. கருப்பையா அளித்துள்ள பேட்டியில், “ஸ்டாலின் தன்னைச்சுற்றி அறிவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை.

இந்துத்துவா சார்ந்த பிரிவினைவாத கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பு நாட்டில் வலுப்பெற்று வரக்கூடிய சூழலில் திமுக இந்துத்துவ கட்டமைப்பை உடைப்பதில் முனைப்பு காட்டவில்லை. தெளிவான கொள்கையோடு முழுமையான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. அதன் காரணமாகவே கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன்” என்றார்.

மேலும், ரஜினி காவி அடையாளத்தில் இருந்து விடுபட நினைப்பது சரியானதுதான். அவருடன் சேர்ந்து பயணிப்பது குறித்தெல்லாம் நான் தற்போது வரை முடிவு செய்யவில்லை.

தற்போதுவரை சேர்ந்து பயணிக்க ஆட்கள் கிடைக்கும் வரை என்னுடைய பயணம் தனிமையானதாகவே இருக்கும்” என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

Comments are closed.