தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நடிகர் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்

0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு முன்பாக நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் என கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு அப்பாவி பொதுமக்களைத்தான் சமூக விரோதிகள் என்று மறைமுகமாக சாடி பேசியுள்ளார் என்று ரஜினிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். ரஜினி காணொலி காட்சி மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.