அர்னாப் கோஸ்வாமி மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்களுக்கு எதிராக வழக்கு

0

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனங்கள் மற்றும் 4 பாலிவுட் அசோசியேசன்கள் இணைந்து ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் மற்றும் அதன் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார், பிரதீப் உள்ளிடோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நடிகையுமான ரியா மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரியா கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். சுஷாந்த் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் அது தொடர்பான செய்திகளை  ஊடகங்கள் மிகவும் தீவிரமாக வெளியிட்டு வந்தன. மேலும் பாலிவுட் உலகின் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டதாகவும் ஊடகங்கள் குற்றச்சாட்டி வந்தன.

சுஷாந்த் தற்கொலை காரணாமாக ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் ஆகிய செய்தி நிறுவனங்களும், அவற்றின் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார் போன்றோர் ஒட்டுமொத்த பாலிவுட் திரைத்துறையை போதைப்பொருள் கும்பலுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குறிய செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாலிவுட்டுக்கு எதிராக பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார், பிரதீப் உள்ளிடோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.