“திப்பு சுல்தான் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவோம்”- எடியூரப்பா

0

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி ஏற்றவுடன், திப்பு சுல்தான் விழாவுக்கு தடை விதித்தார்.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா, “திப்பு சுல்தானின் வரலாறு, பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை. அதனால் அவரது வரலாறு, பாடத் திட்டங்களில் இருந்தும் நீக்கப்படும்’ என்றார்.

சமீபத்தில், கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அப்பாச்சு ரஞ்சன், கல்வி அமைச்சர் சுரேஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், திப்பு சுல்தான் குறித்த அனைத்து தகவல்களையும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திப்பு பற்றி பாடப்புத்தகங்களில் உள்ள வரலாறு பொய்யானது. வருங்கால இளைஞர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, திப்புவின் வரலாறு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாஜக தலைவர் அமித்ஷா ஒரு மேடையில், வரலாற்றை மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பேசினார். மேலும் பல பாஜகவினரும் சாவர்க்கருக்கு பாரத ரத்ன விருது வழங்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால் இதற்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து, அவர்களுக்கு அடிமையாய் இருந்த சாவர்க்கருக்கு, பாரத ரத்னா விருது வழங்கி வரலாற்றை மாற்றம் செய்ய பாசிச பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

Comments are closed.