திப்பு சுல்தான் தினவிழா ரத்து: முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜகவுக்கு உத்தரவு

0

திப்பு சுலதான் பிறந்த தின விழா கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த முடிவை கர்நாடகா பாஜக அரசை மறுபரிசிலனை செய்யுமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திப்பு சுல்தான், அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்தி வரலாற்றில் இடம்பெற்றவர்.இதனால் அவரின் பிறந்தநாள், கர்நாடக மாநிலத்தில்ஆண்டுதோறும் நவம்பர் 10ஆம் தேதி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்தது.

தற்போது பாஜக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், திப்பு சுல்தான் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்பட மாட்டாது என்பதுடன், திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். மேலும் திப்புசுல்தான் பற்றிய பாடங்களையும் பாடநூல்களில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்தார்.

எடியூரப்பாவின் அறிவிப்புக்கு தடைக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து என்ற முடிவை கர்நாடக மாநில அரசு மறு பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், திப்பு ஜெயந்தி கொண்டாடுவோருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.