நெல்லையில் இந்து அமைப்பினர் 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

0
கிறிஸ்தவர்களின் கல்லறையை தாக்கிய இந்து அமைப்பினர் 6 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில் விழா நடத்த கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தை அகற்ற வேண்டும் இந்து மத வெறியர்கள் கலவரம் செய்ய முற்பட்டனர். இதன் பின்னர் கடந்த 18ஆம் தேதி கல்லறைக்குள் சென்ற இந்து அமைப்பினர், சுற்றுச்சுவர் நினைவுத் தூண்கள் என அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும்  மக்களின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளதால் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம். டாமோர், குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 6 பேரைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தச்சநல்லூர் சிறையில் உள்ள இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உடையார், முருகானந்தம், சங்கர், சபரி ராஜ அய்யப்பன், சேர்மன் துரை, கந்தன் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை, “திருநெல்வேலி மாநகரில் பொது அமைதியைக் காப்பதற்கும், பல்வேறு சமூகங்களைக்கிடையே நிலவும் நல்லிணக்கம், அமைதியைக் காப்பதற்கும் சட்ட ரீதியாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோம்” என்றனர்.

Comments are closed.