தன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது

0

திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், பகவான் நந்து தனது ஓட்டுநர் உதவியோடு மதக் கலவரத்தை தூண்டும் விதமாக தன்னை தானே வெட்டிக்கொண்டதை கண்டுபிடித்தனர்.

டெல்லியை போன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக, இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முஸ்லிம் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து கட்சியில் பொறுப்பை பெறுவதற்காக அவர் இப்படி தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொய் வழக்கு கொடுத்த பகாவன் நந்து மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, பகவான் நந்து காவல்துறையிடம் அளித்திருந்த புகாரில் தான் செல்போன் கடை வைத்துள்ளதாகவும், இரவு வீட்டிற்கு போகும்போது தன்னை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பகவான் நந்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல்.

http://www.puthiyavidial.com/hindu-munnani-taminadu-trichy…/

Comments are closed.