தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

0

மக்களவை தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி தமாகா கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் தஞ்சை தொகுதியில் போட்டியிடுறகிறது.  அந்த தஞ்சை தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று ஜிகே. வாசன் அறிவித்தார். இதனையடுத்து, தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

ஆகையால் இந்த மக்களவை தேர்தலில் தமாகா கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும். ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.