கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது!

0

சிவகங்கையைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு மாப்பிள்ளை வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அப்பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் அப்பெண் 4 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் நா்சிங் கல்லூரி தாளாளர், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜ் ஆவார்.

இவர், அந்த மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் அதிகமாக மதிப்பெண் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியே கூறினால் அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்,

மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்த பிறகு, இதுகுறித்து சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். குற்றம் உறுதி செய்யப்பட்டதால், துரைராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் அக்கல்லூரியில் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என கருதி பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசிடம் ரகசியமாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும், மாணவிகளின் விவரங்கள் வெளியே தெரிவிக்கப்படாது என்றும் காவல்துறை ஆய்வாளர் கூறியுள்ளார்.

Leave A Reply