அரசு பேருந்துகளில் அனுமான்: அனுமதி கொடுத்தது யார்…?

0

பொது இடங்களில் சாதி, மதக் குறியீடுகளை போன்ற எந்த போஸ்டரும், ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது.

அதில் வாகனங்களில் பேனட் மற்றும் நம்பர் ப்ளேட் உள்ளிட்ட பகுதிகளில் சாதி, மத அடையாளங்களை குறிக்கும் புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருந்தால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வன்முறைகளை கிளப்பும் விதமாக வாசகங்கள் இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் மத அடையாளங்களை குறிப்பிடும் வகையில் இந்து கடவுள்களில் ஒன்றான ஹனுமனின் புகைப்படமும், (Jai Hanuman) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் அது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பஜ்ரன்தங்கள் குழுவின் அடையாள படமாகவும் உள்ளது.

இது போன்ற ஸ்டிக்கர்கள், தனியார் பேருந்துகளில் தான் இடம்பெற்றிருக்கும். ஆனால் தமிழகத்தில் மாநில அரசுக்கு சொந்தமான அரசு பேருந்துகளில் மத அடையாளங்களை குறிக்கும் படம் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இந்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பா.ஜ.க அரசும் ஆர்.எஸ்.எஸ்ஸும் திட்டமிட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி புரியும் அதிமுக அரசு அதற்கு உருதுணையாக செல்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Comments are closed.