பாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

0

இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கே.கோபிநாத், “பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னர் மத ஒற்றுமைக்கு எதிராக நாட்டில் எந்த ஒரு அமைப்பும் போராட்டம் நடத்தவில்லை. இந்தநிலையில், இந்த தீர்ப்பை கண்டித்து வருகிற 6ஆம் தேதி (நாளை) முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று , சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா முகமது, ‘இந்து கழக தலைவர், பொதுநல வழக்கை தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

ஆனால், இந்து கழக தலைவர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வு விசாரித்ததில் ‘சட்டம் ஒழுங்கை எப்படி நிலை நாட்டவேண்டும் என்பது தமிழக டி.ஜி.பி.க்கு தெரியும். போராட்டம் நடத்த யாராவது அனுமதி கேட்டால், அது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பது போலீசாரின் பணி.
அவ்வாறு இருக்கும்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கவில்லை.

Comments are closed.