என்.ஆர்.சியை புறக்கணிக்கும் திருநங்கைகள்: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆா்சி) திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு. பதிலளிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

இதுதொடா்பாக அஸ்ஸாமை சோ்ந்த முதல் திருநங்கை நீதிபதியான ஸ்வாதி பிதான் பரூவா என்பவா், பொது நல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா். அதில் என்ஆா்சி பட்டியலில் திருநங்கைகள் வேண்டுமென்று புறக்கணிக்கப்பட்டுள்ளனா். என்ஆா்சி இறுதி பட்டியலில் சுமாா் 2,000க்கும் மேற்பட்ட திருநங்கைகள் விடுபட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு, திங்கள்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுக்கு, மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும்  பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

என்ஆா்சிக்காக சுமாா் 3.3 கோடி போ் விண்ணப்பித்திருந்தனா். அதில், 3.1 கோடி பேரின் பெயா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. சுமாா் 19 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.