காஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு!

0

காஷ்மிர் விவகாரத்தில் பாஜக அரசை எதிர்த்த மாணவியை தேச துரோக வழக்கில் கைது செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவி சமூக ஆர்வலர்  ஷெஹ்லா ரஷீத், சமூக வலைதளங்களில் காஷ்மிர் நிலவரம் குறித்தும் பாஜக அரசை எதிர்த்தும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஷெஹ்லா ரஷீத்தின் பதிவுகள் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, ஷெஹ்லா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் தாக்கல் செய்துள்ளார். அந்த புகாரில், “ஜம்மு காஷ்மிர் மற்றும் நாட்டில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் ஷீலா ரஷீத் போலிச் செய்திகளைப் பதிவிட்டு வருகிறார். இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு  களங்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ஏ கீழ் தேசத்துரோக குற்றமாகும். அவரது செயல்பாடுகளை முடக்கி, கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாகசெஹ்லா ரஷீத்தை கைது செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.