டெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது!

0

டெல்லியை சேர்ந்த 29 வயதான ரைமா யாஹ்யா என்ற பெண், “தனது கணவர் அதிர் ஷாமின் வாட்ஸ் அப் மூலமாக முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் இருந்த அந்த பெண்ணின் கணவரை இன்று காலை கைது செய்தனர்.

இதன் மூலம் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் ஆளாக அதிர் ஷாமின் மாறியுள்ளார்.

இரண்டு முறை தோல்வியடைந்த முத்தலாக் மசோதாவினை கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது குற்றமாகும். இதன் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.