மருந்துகளை எங்களுக்கு வழங்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – மோடியை மிரட்டிய டிரம்ப்

0

கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய பாஜக அரசு இன்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு, அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமல் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை தேவையான அளவில் உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed.