“பாஜக ஒரு கோழை” டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

0

எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை விமர்சித்து, கோழை பாஜக என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாஜக அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் #CowardBJP என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நெட்டின்கள் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.

சீனா எல்லையில் ஆக்கிரமித்து வரும் நிலையில் அதனை தடுக்காமல் இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் தடுப்புவேலிகள், தற்காலிக தடுப்பு சுவர்கள், போராட்டங்களில் தங்கள் கட்சிக்காரர்களை ஊடுருவச்செய்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி சமூக வலைதளாங்களில் பலரும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.

Comments are closed.