UAPA சட்டத்தின் கீழ் கைதான உமர் காலித்-ஐ நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியின் பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தொடர் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பாஜகவின் கபில் மிஷ்ரா,  சி.ஏ.ஏ எதிராக ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீது வன்முறை தூண்டும் விதத்தில் அவர் ஒரு போராட்டத்தை நடத்தினார். கபில் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற பாஜகவினரின் இந்த போராட்டம் கலவரமாக மாறி அப்பாவி மக்களை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 583 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையிக்கு ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் காரணாமாக இருக்கக்கூடும் என்ற பொய் குற்றாச்சாட்டில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி டெல்லி போலீஸ் சுமார் 10மணி நேரம் விசாரித்த பின்னர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காலித்தை கைது செய்தது.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம் காலித்-ஐ 10 நாட்கள் டெல்லி காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்றுடன் காவல்துறையின் காவல் அவகாசம் நிறைவடந்த நிலையில், உமர் காலித்-ஐ வருகின்ற அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.