CAAக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மனு தாக்கல்

0

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய்வற்றுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம்,  ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இதனிடையே CAAவை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்ஜெடி மூத்த தலைவர் மனோஜ் ஷா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா, மக்களவை உறுப்பினர் அசாதூதின் ஓவைசி, சிபிஐ உள்ளிட்ட 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவிக்கையில், “குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில், வெளிநாட்டு அமைப்பின் தலையீட்டை ஏற்க முடியாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments are closed.