உன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை!

0

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுபம் திரிவேதி என்ற 2 பேரால் கடத்தப்பட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டார். ஆனால் இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரனை, ரேபரேலி கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பங்கேற்பதற்காக, பாதிக்கப் பட்ட பெண் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்துக்கு புறப்பட்டார். அப்போது அவர் செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அப்பெண்ணை கடுமையாக தாக்கினர். பின்னர், அவர் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீவைத்தனர். இளம்பெண் மீது தீப்பற்றி எரிந்தது. எரிந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு ஒடினார் அந்த பெண்.

சிகிச்சையின்போது அந்த இளம்பெண்,  வாக்குமூலம் அளித்தார். அதில், தான் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் 5 பேர் தன்னை வழிமறித்து தாக்கி தீவைத்து எரிந்ததாக அவர் கூறினார்.

இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரித்தனர் மருத்துவர்கள்.

லக்னோவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சப்தர்ஜங் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கவலைக்கிடமான நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்னொரு பாலியல் வல்லுறவு வழக்கில் பெரிதும் பேசப்பட்ட உன்னாவ் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய பெண், கார் விபத்து ஒன்றில் கடும் காயமடைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு விசாரணையை காவல்துறை தொடங்கியது.

Comments are closed.