உன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…?

0

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் சோ்ந்த இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனா். இவா்களில் ஒருவா் தப்பி விட்டார். கைதான மற்றொருவா் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்திற்க்கு  சென்றபோது, சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உள்பட 5 போ் அந்த பெண்ணை வழிமறித்து தாக்கி, தீ வைத்துக் கொளுத்தினா். பின்னர் மருத்துபனையில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “இளம்பெண் மரணம் அடைந்தது துயரம் அளிக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் கைது செய்து என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசாரை ஒரு தரப்பினர் பாராட்டி வந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சாட்சி சொல்வதற்காக சென்ற 24வயது இளம்பெண்ணை எரித்தக்கொன்ற இச்சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் என்கௌண்டரில் சுட்டுக்கொன்றதுபோல, இவர்களையும் சுட்டு தள்ளவேண்டும் என்பதே மக்களில் விருப்பம்.

Comments are closed.