பண நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகம் வார இறுதி நாட்களில் சனி, ஞாயிறு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை பகிர்ந்துள்ள ஒரு ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியுள்ளன.
மொத்தத்தில், 34 உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை ஐ.நா.வின் நிதி ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாள் காலத்திற்குள் முழுமையாக செலுத்தியுள்ளனர்.
ஐ.நா. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக மோசமான பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அடுத்த மாதம் அதன் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போகலாம் என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறினார்.
இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஐக்கிய நாடுகள் சபை எதிர்கொள்ளும் மோசமான பண நெருக்கடி குறித்து, அவர் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக குட்டெரெஸ் கூறினார்.
Discussion1 Comment
curse from palastine