அஸ்ஸாம் முஸ்லிம்களின் மனித உரிமைகள் என்.ஆர்.சி.யால் பாதிப்பு- ஐ.நா. வருத்தம்

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வின் சமூக, கலாசார, மனித உரிமைகள் குழுகூட்டம் இரண்டு நட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

அதில் ஐ.நா. சிறுபான்மையின குழுவின் சிறப்பு அதிகாரி ஃபெர்னான்ட் டி வாரென்ஸ் பேசியதாவது: இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, முஸ்லிம்களுக்கான மனித உரிமைகளை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான வங்காளி முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வரக்கூடிய காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

இதுகுறித்து பதிலளித்த ஐ.நாவுக்கான வின் இந்தியா முதன்மை செயலர் பலோமி திர்பாதி, ‘என்.ஆர்.சி முஸ்லிம்களின் உரிமைகளை பாதிப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்.ஆர்.சி இறுதிப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்யலாம். தீர்ப்பாயம் மூலமும் நிராகரிக்கப்படுபவர்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையிடலாம்’ என்றார்.

இதையடுத்து, ஃபெர்னான்ட் டி வாரென்ஸ் கூறுகையில், ‘அஸ்ஸாமில் காணப்படும் சூழலை நேரில் கண்டறிவதற்கு இந்தியா எனக்கு அழைப்பு விடுக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

Comments are closed.