துப்பாக்கியால் வானை நோக்கி சுட்ட பாஜக தலைவர்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

0

உத்திர பிரதேசத்தின் பாஜக தலைவர்களில் ஒருவர், தீபாவளியில் தன் துப்பாக்கி குண்டுகளை வானில் பொழிந்து தனது செல்வாக்கை பொதுமக்களிடம் காட்ட முயன்றுயுள்ளார். அந்த விடியோ வைராலனதை அடுத்து துப்பாக்கி உரிமம் ரத்தாகி,  வழக்குப் பதிவாகியுள்ளது.

உ.பி.யின் பாஜக தலைவர்களின் ஒருவரான நிதின் குப்தா துப்பாக்கியால் சுட்டு தீபாவளி கொண்டாடியது சிக்கலாகி விட்டது. சஹரான்பூர் மாவட்ட பொறுப்பாளரும் செய்தித்தொடர்பாளருமான இவர், தன் வீட்டு மாடியில் நின்று துப்பாக்கியால் குண்டுகளை சுட்டு பொழிந்துள்ளார்.

அதனை விடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமையும் அடித்துள்ளார். இதனால், உ.பி.யின் பாஜக தலைமை வேறுவழியின்றி நிதின் குப்தா மீதான நடவடிக்கைகான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சஹரான்பூர் மாவட்ட காவல்துறையால் நிதின் குப்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் அரசு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தமுறை, மாசு காரணமாக டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பிகார் மாநிலங்களில் தீபாவளிக்கான பட்டாசுகள் வெடிக்கத்
தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், உ.பி.யில் வழக்கம் போல் எந்த தடையும் இன்றி பட்டாசுகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

எனினும், பட்டாசுகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வெடித்திருப்பது பாஜக தலைவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்களினால் பொது விழாக்களில் பல உயிர்கள் பலியாகி விடுவதும் உண்டு.

Comments are closed.