ஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்

0

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இநத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கொடூர சம்பங்களில் ஈடுபட்ட அனைவருக்கு தக்க தண்டனை வழங்க பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு கைது செய்யப்பட்ட தாகூர் சமூககத்தை சேர்ந்தவர்களை விடுக்ககோரி பாஜக, பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் கர்ணி சேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் முன்பு, 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கூடும்வரை, அம்மாவட்ட காவல்துறை என்ன செய்தது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து போராட்டத்தின் மூலம் வன்முறையை தூண்ட பாஜக தலைவர் ராஜ்வீர் சிங் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed.