கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தின்போது, விதிகளை மீறியதாக கூறி வகையில் முசாஃபர்நகர் பகுதியில் கூடியதாக நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர் 12 பேர் மீது கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து காவல்திறை கூறியதாவது: இந்திய தண்டனையியல் சட்டம், தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட 12 பேர் மீது முஸாஃபர்நகரில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட அந்த 12 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று காவல்துறையினர் கூறினர்.
மேலும் இதுபோன்று, டெல்லி, மணிப்பூர், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய நகரங்களில் 22 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு எதிராகவும் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.