உ.பியில் சப்பாத்தியுடன் உப்பு தொட்டு சாப்பிட்ட பள்ளி குழந்தைகள்: புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு!

0

உத்திர பிரதேசத்தில் உப்பைத் தொட்டு சப்பாத்தி சாப்பிட்டதை வீடியோவாக எடுத்து பகிர்ந்த பத்திரிகையாளர் மீது இரண்டு பிரிவுகளில் உ.பி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்திர பிரதேச மாநில சுயூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கு மாணவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவாக சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பள்ளி குழந்தைகள் சாப்பிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரும்பாலான நாட்களில் மாணவர்களுக்கு ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும், சில நாட்களில் சோறும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் தான் அளிக்கப்படுகிறது. யாராவது முக்கியஸ்தர்கள் வந்தால் மட்டும் குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது” என்று பெற்றோர்கள் கூறினர்.

இந்த நிலையில், மாணவர்கள் சப்பாத்தியும், உப்பும் சாப்பிட்டதை வீடியோ பதிவு செய்த பவான் ஜெஷ்வால் பத்திரிகையாளர் மீது மாநில அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் தெரிவிக்கையில், “நான் மாநில அரசுக்கு ஒத்துழைக்காமல் எதிராக செயல்பட்டதால், என் மீது இப்படி ஒரு வழக்குப்பதிவை செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.