உ.பி.யில் இஸ்லாமியரை கொலை செய்த 20 பேர் கொண்ட கும்பல்

0

உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக இனவாத மோதல்கள் காணப்படாத ஊரில், ஹோலிக்கு முந்தைய இரவு பெரும்பாலான மக்கள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்வதில் பிஸியாக இருந்தபோது, ஒரு முஸ்லீம் நபர் மதவாத கும்பலால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

சோன்பத்ரா மாவட்டத்தின் பெரோஷி கிராமத்தில் 20 பேர் கொண்ட கும்பல் ஒரு வயதான இஸ்லாமியர், முகம்மது அன்வர், மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர்.

அன்வர், அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் இருந்து ஸியாரத் (யாத்திரை)க்கு பின் வீடு திரும்பிய போது, அந்த கும்பல் முதலில் கம்புகளை கொண்டு அவரை அடித்துள்ளனர். பின்னர் கோடாரியை பயன்படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இருபது நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ரவிந்தர் கர்வார் தலைமறைவாகிவிட்டார்.

அன்வரின் சகோதரர் நயீமின் கூறுவதாவது, “மோஹர்ரம் சாபுத்திரா என அழைக்கப்படும் ஒர் சிறிய நிலத்தின் மீதுள்ள மோதல் தான் இதற்கு காரணமாகும். இந்த நில தகராறு கடந்த 10-15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் இங்கு இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கர்வாரருக்கு, ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை இந்த நிலத்தில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.”

அரசாங்க பள்ளி ஆசிரியரான கர்வார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க முயன்றார் என்றும் அவர் கூறினார். காவல்துறை இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்று கூறிய போதும் அது அன்வரின் கொலையில் தற்போது முடிந்துள்ளது.

முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில் இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விசாரணையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

Comments are closed.