உ.பி.யில் CAA எதிர்ப்பு போராட்டம்: காவல்துறை தாக்குதலில் 11பேர் உயிரிழப்பு !

0

உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, புலந்த்ஷெகர், கான்பூர், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், லக்னோவில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி நேற்று லக்னோவில் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தி பலரை கைது செய்தது. முஸாபர்நகரில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களையும் கலைத்தனர்.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். 15 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்களை, காவல்துறை தாக்கியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸார் கூறுகையில் உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த நேற்று நடந்த போராட்டம், அதில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் இன்று காலை உயிரிழந்தனர்.

இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்களால் ஏராளமான போலீஸாருக்கும்எ காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ எனக் கூறினர்.

Comments are closed.