உன்னாவில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீச்சு!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் வன்முறைகளால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் முசாபர் நகரில் பாலியல் வழக்கை திரும்பபெற மறுத்ததால் பெண் ஒருவர் மீது குற்றவாளிகள் ஆசிட் ஊற்றி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண் முசாபர் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் மீது வீசப்பட்ட ஆசிட் வீரியம் குறைந்ததால் சிறிய காயங்களுடன் அந்த பெண் உயிர் தரப்பினர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறைதேடி வருகிறது.

முன்னதாக உபி மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றபோது ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்ததும் இதன் பின்னணியில் பாஜகவினர் இருந்ததும் தெரியவந்தது.

Comments are closed.