உ.பியில் 14 வயது தலித் சிறுமி கொடூர கொலை!

0

உத்தர பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

உ.பி ஜலான் மாவட்டம் அடா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி  சனிக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். இரவாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறிமியை கண்டுபிடிக்க  தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர், மறுநாள் ஞாயிறு காலை சிறுமியின் உடல் கண்டெடுத்தனர். இதை தொடர்ந்து விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமி கொலையில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர். எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே எதுவும் கூற முடியும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.