நாட்டின் கொள்கையை மீறி டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாரா மோடி..?

0

அமெரிக்காவில் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா சென்றாரா? என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மோடி நலமா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் இணைந்து மோடி பங்கேற்றதையும், அவர் பேசியதையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் இவ்வாறு விமர்சித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் சர்மா இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு தேர்தல் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பது இந்தியா நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும்  கொள்கை. ஆனால், இதனை மீறி அமெரிக்கப் பயணத்தில் டிரம்ப்புக்கு ஆதரவாக மோடி, வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி எது ஆட்சிக்கு வந்தாலும், இந்திய நலன்கள் சார்ந்து, நமது கொள்கைகளுக்கு ஏற்ப உறவைப் பேணுவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால், இப்போது, மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளது இந்தியாவின் கொள்கைக்கு முரணானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.