அமெரிக்க வான்வழி தாக்குதல்: ஆப்கனிஸ்தானை சேர்ந்த 10 குழந்தைகள் பலி!

0

ஆப்கானிஸ்தானின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் எதிராக அமெரிக்கப் படையினர் வான்வழி நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட 13  பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்கள் இடையே உள்நாட்டு சண்டை நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஆப்கான் அரசு, அமெரிக்கா அரசு மற்றும் தலிபான் என மூன்று தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டூஸ் நகரில் தலிபான்களுக்கு எதிராக கடந்த வாரம் வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சர்வதேச படையினர் தாக்குதல் நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 10 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா தூதரகம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட டஷ்ட்-இ-ஆர்கி மாவட்டத்தில் இருந்து பல குடும்பங்கள் கண்டூஸ் நகருக்கு மற்றப்பட்டனர். அந்த குடும்பத்திலுள்ள குழந்தைகளே இந்த  தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என நேட்டோ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அண்மையில் ஐநா வெளியிட்ட அறிக்கையில், மற்ற ஆண்டுகளை காட்டிலும் கடந்த 2018ஆம் ஆண்டு வான்வழி தாக்குதலில் முதல்முறையாக 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.