காங்கிரஸுடன் இணைந்தாலும் இந்துத்துவாவை விட்டுக்கொடுக்க மாட்டேன்- உத்தவ் தாக்கரே

0

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “என்னை எதிர்த்தவர்கள் தற்போது என்னுடன் உள்ளனர். ஆனால், என்னுடன் இருந்த பாஜக தற்போது எதிரணியில் உள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், தேவேந்திர ஃபட்னவீஸிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நான் எப்போதும் அவருடன் நண்பராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய இந்துத்துவ கொள்கையிலிருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாஜக அரசை சிவசேனா ஒருபோதும் நிராகரித்ததில்லை.

தேவேந்திர ஃபட்னவீஸை எதிர்கட்சி தலைவர் என்று அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை, மாறாக பொறுப்புக்குரிய தலைவர் என்றே அழைக்க விரும்புகிறேன். பாஜக எங்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், பாஜக – சிவசேனா  கூட்டணி ஒருபோதும் உடைந்திருக்காது” என்றார்.

Comments are closed.