உங்கள் மகளை இவ்வாறு எரிப்பீர்களா? உ.பி காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

0

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இநத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்ணின் சடலம் பெற்றோருக்கு தெரியாமல் உ.பி போலீஸாரால் எரிக்கப்பட்டதால் இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

ஹத்ராஸ் பெண்ணின் உடலை அவரச அவரசமாக எரித்தது மனித உரிமை மீறல் -அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்

அப்போது பெண்ணின் குடும்பத்தினா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். தங்களிடம் சொல்லாமலேயே மகளின் உடலை இரவோடு இரவாக காவல்துறையினா் எரித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.  சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ய்புள்ளதால்தான் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் தெரிவித்தனா்.

அப்போது, நீதிபதி பங்கச் மிதால், நீதிபதி ரஞ்சன் ராய் ஆகியோர், ஏடிஜி பிரசாந்த் குமாரிடம் உங்களது மகளை இதுபோன்று இரவோடு இரவாக எரிக்க அனுமதி அளித்துருப்பீர்களா? பாதிக்கப்பட்டவர்கள் பணக்கார குடும்பத்தில் இருந்து வந்திருந்தால் காலவ்துறை நடவடிக்கை இதுபோன்று இருந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக இவ்வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சாட்சிகளுக்கும் அளிக்கப்பட்ட பாதுகாப்புகள் என்ன? அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் விசாரணை நிலை என்ன? என்று கேள்வி எழுப்பி வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply