உ.பி-யில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக பயங்கரவாதி கைது

0

உத்தர பிரதேச மாநிலம் பாலியா கலான் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக முக்கிய குற்றவாளியான பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங் உள்பட மூவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்தூறை கூறியதாவது: பாலியா கலான் துணை மாஜிஸ்திரேட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கூட்டத்தை துணை மாஜிஸ்திரேட் ரத்து செய்தாா். இதன் காரணமாக ஆத்திரமடைந்த பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங், அங்கு கூடியிருந்தவா்களை துப்பாக்கியால் சுட்டாா். அதில் காயமடைந்த 46 வயது நபா் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான தீரேந்திர சிங்கை சிறப்பு அதிரடிப்படை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பாலியா நகரத்தில் உள்ள வைஷாலி பகுதியில் அவருடன் சோ்த்து இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இரண்டு குற்றவாளிகளும் சிக்கியுள்ளனா்.

மேலும், இந்த வழக்கில் மொத்தம் எட்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளாத 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 காவலா்கள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Comments are closed.