டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பத்திரிகையாளர்: வழக்குப்பதிவு செய்த உத்தர பிரதேச காவல்துறை

0

நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பற்றி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக, தி வயர் பத்திரிக்கை நிறுவனத்தின் முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா மீது லக்னோ நகர போலீசார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“பிரசாந்த் கனோஜியாவின் டிவிட்டர் பக்கத்தில் வெறுக்கத்தக்க கருத்துக்களை தான் கண்டதாக” வழக்கு கொடுத்த சஷான் சேகர் தெரிவித்தார். இவர் அம்மாநில பாஜக கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார்.

பத்திரிகையாளர் கனோஜியா மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்வது இது இரண்டாவது முறையாகும். ஜூன் 2019ல், யோகி ஆதித்யநாத் குறித்த பதிவுகளால், லக்னோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

“டெல்லியில் வசிக்கும் கனோஜியா மீது வழக்கு கொடுத்த பாஜககாரர் ஆதாரங்கள் வைத்தில்லை. பிரதமர் மற்றும் முதலமைச்சர் குறித்து ஆட்சேபனை கருத்துக்களை தெரிவித்ததாக பிரசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி சஞ்சய் ராய் தெரிவித்தார்.

இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவதூறு, பொதுமக்கள் மத்தியில் அச்சம் போன்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் குற்றங்கள் என தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளிலும் கனோஜியா மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

 

Comments are closed.