லவ் ஜிஹாத்: ஆதாரமின்றி வழக்குப்பதிந்த உ.பி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

0

உத்தர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லிம் இளைஞருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் லவஜிஹாத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம் மீது குறிவைத்து சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் என்பவர் முசாஃபர்நகரில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்து, தனது மனைவி அவரது வலையில் சிக்க வைத்து மதம் மாற்ற முயன்றதாகவும், அவரை மதம் மாற்ற முயற்சித்ததாகவும் அக்‌ஷய் புகார் அளித்திருந்தார்.

அக்‌ஷய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். கடந்த மாதம் தன்மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை அகற்ற நதீம் அளித்த மனு அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று கண்டறியப்பட்டது. மேலும் நதீம் பலவந்தமாக மதமாற்ற முயற்சி செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் எந்த ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்களை குறிவைத்து கைது செய்வதற்காக உத்தர பிரதேச யோகி அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது.

Comments are closed.