தாடி வைத்திருந்ததால் இஸ்லாமிய காவலரை பணியிடை நீக்கம் செய்த உ.பி போலிஸ்

0

உத்தர பிரதேச மாநில காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய காவலர் ஒருவர் தாடி வைத்திருந்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இன்தசிர் அலி. இவர் மூன்று வருடங்களாக இந்த காவல் நிலையத்தில் தாடியுடன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில மாதவாத காவல்துறை உயரதிகாரிகள் தாடியை எடுத்துவிட்டு வருமாறு அலிக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அலி தாடி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்காமல், அலியை பணியிடை நீக்கம் செய்து பாக்பெத் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைத்துக்கொள்ள அனுமதி இருப்பதாகவும், வேறு மதத்தினர் தாடியை மழித்திருக்க வேண்டும் என அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தாடி வைப்பது கடமையாக இருக்கும் நிலையில், அதை காரணம் காட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் இன்தசிர் அலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவத்தால் உ.பி அரசுக்கும், காவல்துறைக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் எழும்பியுள்ளது.

Comments are closed.