உ.பி அரசு முஸ்லிம்களையும், தலித்துகளையும் மனிதர்களாக கருதுவதில்லை -ராகுல் காந்தி

0

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இநத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்ணின் சடலத்தை பெற்றோருக்கு தெரியாமல் உ.பி காவல்துறையினர் எரித்ததால், அதனை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்ஜித் ஸ்ரீவாஸ்தவா, உயிரிழந்த பெண்ணின் நடத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் பெண்ணையும் அவர்கள் ஒரு மனிதராக கருதாததால் தான்,  பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என முதல்வர் யோகியும், காவல்துறையினரும் கூறுகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.