உ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை

0

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக விகாஸ்துபே என்கிற ரவுடியை உ.பி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.

இந்நிலையில் விகாஸ் துபே சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கியிருந்ததது தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், காவல்துறையினர் ஓடட்லுக்கு வருவதற்கு முன்னரே விகாஸ்துபே தப்பி சென்றுள்ளார். விகாஸ் துபே அந்த ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் டெல்லி, ஹரியானா, ஃபரிதாபாத் மற்றும் குர்கான் பகுதிகளிலும் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.