உ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்

0

கொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் கொரோனாவை பரப்பியதாக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. மேலும் தப்லீக் ஜமாத்தினர் சிலருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த நஸீம் அஹமது (65), டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் கலந்து கொள்ள இந்தியா வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இதனால் உ.பி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. மேலும் நஸீம் உபி போலீசாரால் ஏப்ரல் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டார்.

மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா இல்லை என உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த நஸீம் ஏப்ரல் 17 ஆம் தேதி தற்காலிக சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஒரு வாரம் கழித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் இதய நோய் பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

Comments are closed.