உன்னாவ் பெண் தந்தை கொலை வழக்கு: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்பு

0

உத்தர பிரதேசத்தில் உன்னாவ் இளம்பெண்ணை கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பெண் சிறுமியாக இருந்தபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு கடந்த டிசம்பா் மாதம், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீஸ் காவலில் இருந்தபோது, அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கை உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடா்பாக சிபிஐ கடந்த 2018 ஆண்டு ஜூலை 13ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் கூறியிருப்பதாவது:

“இளம்பெண்ணின் தந்தையும், அவரது நண்பரும் வெளியூா் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சசி பிரதாப் சிங் என்பவரும் குல்தீப் செங்கரின் தம்பியுமான அதுல் சிங் செங்காரும், இளம்பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளாா். பின்னா் போலீஸாா் அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா். இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது அப்பெண்ணின் தந்தை உயிரிழந்தாா்” இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்தக் குற்றப்பத்திரிகையில் குல்தீப் செங்கா், அதுல் சிங் செங்கா், காவல் ஆய்வாளா் கம்தா பிரசாத் மற்றும் 6 போ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில். டெல்லி நீதிமன்றம் தற்போது தீா்ப்பு வழங்கியுள்ளது.

அந்த பெண் தனது உறவினா்களுடன் கடந்த ஆண்டும் ஜூலை மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. அந்த விபத்தில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரிஞரும் படு காயமடைந்தனா். பெண்ணின் உறவினா்கள் உயிரிழந்தனா்.

இதில் காயமடைந்த அந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடா்பாக குல்தீப் செங்கா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்., இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இளம்பெண்ணின் தந்தை கொலை வழக்கில் குல்தீப் செங்கா் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை (நேற்று)  தீா்ப்பளித்தது.

டெல்லி நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் தா்மா கூறுகையில், ‘அந்த பெண்ணின் தந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் குல்தீப் செங்கா் செயல்படவில்லை. ஆனால், உயிா்போகும் அளவுக்கு அந்த பெண்ணின் தந்தை தாக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

இந்த தீர்ப்புக்கு முன்னதாக குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக தலைமை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் பாலியல் வழக்குகளிலுள்ள பலர் பாஜக கட்சியிலேயே உள்ளனர். இருப்பினும் அவர்கள் பெண் பாதுகாப்பு, பெண் சுதந்திரம் என்று பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.