உ.பி-யில் இஸ்லாமிய பெயரில் உள்ள இடங்களை மாற்றிவரும் யோகி அரசு

0

உத்திர பிரதேச மாநிலத்தில் ஃபைஸாபாத் மாவட்டத்தின் பெயர் அயோதியா என மாறியது. அதுபோல அந்தரயில் நிலையத்தையும் அயோதியா என மாற்ற உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

உபி.-யின் அயோத்தியை ஒட்டியுள்ள நகரம் ஃபைஸாபாத். இந்த பெயரை மாற்றி அயோதியா மாவட்டம் என யோகி அரசு கடந்த வருடம் மாற்றியது.

இந்நிலையில்க் அந்த ரயில் நிலையத்தின் பெயர் ஃபைஸாபாத் என்ற பெயரிலேயே இருந்தது. தற்போது இதன் பெயரையும் மாற்றி அயோதியா ரயில் நிலையம் அல்லது சாக்கேத் ரயில் நிலையம் என்று மாற்றா உ.பி முதல்வர் யோகி முடிவெடுத்துள்ளார். இதற்காக உ.பி அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

உ.பி-யில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து, முதல்வராக யோகி ஆனதிலிருந்து , இஸ்லாமியர்களின் பெயரில் உள்ள முக்கியமான இடங்கள் பெயர் மாற்றப்பட்டப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னதாக உபி.-யின் அலகாபாத் மாவட்டத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. அடுத்து வாரணாசிக்கு அருகிலுள்ள சண்டவுலியின் முகல்சராய் ரயில் நிலையம், பண்டிட் தீன் தயாள் உபாத்யா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply