உ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு

0

CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சொத்துக்களை, தங்களது அடக்குமுறையை கொண்டு உத்தர பிரதேச பாஜக அரசு பறிமுதல் செய்ய துவங்கியுள்ளது.

மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிலும் கடந்த டிசம்பர் மாதம் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி உயிர்களை பறித்தது. மேலும் அதில் ஆயிரக்கணக்கானோரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

இதனிடையே, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வேலையிலும் உத்தர பிரதேச பாஜக அரசு இறங்கியுள்ளது.

தற்போது ஹசன்கஞ்ச் பகுயில் மகானீர் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடை மற்றும் சிற்றுண்டியை பறிமுதல் செய்துள்ளது. இதுதவிர, காதரா பகுதியில் 13 பேரிடம் ரூ. 21.76 லட்சம் சொத்துக்கள், சவுக் பகுதியில் 24 பேரிடம் ரூ.69.65லட்சம் சொத்துக்கள், தாக்குர் கஞ்ச் பகுதியில் 10 பேரிடம் ரூ.47.85 லட்சம் சொத்துக்கள் என ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்புள்ளசொத்துகளை பறிமுதல் செய்ததோடு, இழப்பீட்டைப் பெற 54 பேருக்கு நோட்டீஸூம் அனுப்பியுள்ளது.

ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்குகள் போடப்பட்டுள்ளன. போராட்ட சமயங்களில் காவல்துறையினரே அவர்களது வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய வீடியோக்கள் சமூக வைதளங்களில் வைரலானதை அடுத்தும், இது போன்ற குற்ற வழக்குகளை பாஜக அரசின் காவல்துறை அப்பாவி மக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

Comments are closed.