ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக முதல்வர்: சிபிஐ விசாரணை

0

உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பசு சேவை ஆணையத்தின் தலைவா் பொறுப்புக்கு தன்னை ஆதரிக்க அம்ரிதேஷ் செளஹான் என்பவா் கடந்த 2016-ஆம் ஆண்டு திரிவேந்திர சிங் ராவத் உறவினா்களின் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்றம் செய்ததாக உமேஷ் சா்மா என்ற பத்திரிகையாளா் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

பின்னர் உமேஷ் சா்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவா் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உமேஷ் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், திரிவேந்திர சிங் ராவத் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து திரிவேந்திர சிங் ராவத் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

Comments are closed.